Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

சிங்கள கிராமங்களை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைக்கவும் -பிரதேச செயலகத்திற்கு கடிதம்

Posted On : June 19, 2017

வவுனியாவின் சிங்கள கிராமங்களான பொபஸ்வேவா 01, பொபஸ்வேவா 02 ஆகிய சிங்கள கிராமங்களையும் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைத்துச் செயல்படுமாறு பிரதேச செயலகத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தொடர்பில் உள்ளூர் அமைப்புக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் வவுனியா வடக்கு பிரதேச பொது அமைப்புக்கள் விபரம் தெரிவிக்கையில் ,

வவுனியா மாவட்டத்தின் சிங்கள கிராமங்களான பொபஸ்வேவா 01, பொபஸ்வேவா 02 ஆகிய இரு சிங்கள கிராமங்களையும் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைத்துச் செயல்படுமாறு தற்போது பிரதேச செயலகத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . இவ்வாறான 6 கிராமசேவகர் பிரிவுகளின் மக்கள் வவுனியா வடக்குடன் வாழாதபோதிலும் குறித்த 6 கிராம மக்களையும் உள்ளூராட்சி அமைப்பில் வவுனியா வடக்கு பிரதேசத்துடன் இணைக்கப்பட்டனர்.

இவ்வாறு இணைக்கப்பட்ட செயல் வடிவம் தொடர்பில் நாம் அந்தச் சமயமே எதிர்த்து குரல் கொடுத்ததோடு எதிர்.காலத்தில் குறித்த கிராமங்களை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைத்து விடுவார்கள் என்ற அச்சத்தினையும் வெளியிட்டுருந்தோம். இருப்பினும் அப்போது குறித்த விடயம் தொடர்பினில் எவருமே கவனம் செலுத்தவில்லை இதனால் தற்போது எமது பிரதேச செயலாளர் பிரிவினில் இவ்வளவு காலமும் இல்லாத சிங்கள மக்கள் ஓர் கடிதம் மூலம் உட் புகுத்தப்பட்டனர்.

இதனை எல்லை மீள் நிர்ணயக் குழுவின் முன்பாக நாம் எடுத்துக் கூறியபோதும் அவர்கள் ஒப்புக்கு எமது தகவலை பதிவு செய்தனரே அன்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வெறும் 8 ஆயிரம் தமிழர்கள் வாழும் பிரதேச செயலாளர் பிரிவிற்குள் ஒரே இரவில் 400 சிங்களவர்கள் உட்புகுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறான செயல்களைத் தடுத்து தமிழ் மக்களின் இருப்பைக் காக்க வேண்டியவர்களோ இன்றி வீதிகளில் தெருச் சண்டியர்கள்போன்று தமது பதவிக்காக போராடுகின்றனரே அன்றி எம்மை திரும்பியும் பார்க்கவில்லை என்பதனே தற்போதைய மன வேதனை என்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்