Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

பூநகரி கௌதாரிமுனை , வினாசியோடைக் கிராமங்களில் மீண்டும் மணல் அகழ்வு !!

Posted On : June 19, 2017

பூநகரி கௌதாரிமுனை , வினாசியோடைக் கிராமங்களில் மீண்டும் மணல் அகழ்விற்கான முயற்சிகள் இடம்பெறுவதோடு இதில் சிலர் மாகாணத்மிற்கு வெளியிலும் மணல் கொண்டு செல்லவுள்ளதால் ஏற்படும் பாதிப்புக்களை உடன் கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆவண செய்ய முன்வரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவின் கடல்கரைக் கிராமங்களான கௌதாரிமுனை , வினாசியோடைக் கிராமங்களில் யுத்தத்மிற்குப் பின்னர் வகை தொகையின்றி பாரிய அளவில் மணல் கொள்ளையும் அகல்வும் இடம்பெற்றது. இதனைத் தடுக்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவருமே செவிசாய்க்காத திலைஏற்பட்ட சமயம் எம்மால் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதனையடுத்து குறித்த மணல் அகழ்வுகள் தடுக்கப்பட்டிருந்தன .
இருப்பினும் குறித்த பகுதியில் மணல் அகல்வினை மேற்கொள்வது தொடர்பில் மாவட்டச் செயலகம் ஊடாக ஆய்விற்கு உட்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தனர். இதன் பின்னர் இப்பகுதிகளில் மணல் அகழ்வதற்கான அனுமதிகோரி 14பேர் விண்ணப்பித்திருந்தனர். அவ்வாறு விண்ணப்பித்த 14 பேரில் 7பேரிற்கு மணல் அகழ்விற்கான அனுமதியினை வழங்குவதற்கு மாவட்டச் செயலகம் சிபார்சு செய்து பி்தேச செயலகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளமை தெரியவருகின்றது. இவ்வாறு சிபார்சிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள 7 விண்ணப்பதாரிகளில் ஐவர் மட்டுமே வடபகுதியை சேர்ந்தவர்களாகவும் இருவர் தென்பகுதியை சேர்ந்தவர்களாகவுமே கானப்படுகின்றனர்.
எனவே தற்போது நில உரிமையாளர்கள் என்னும் பெயரின் ஊடாக புதிய அனுமதிகளின் அடிப்படையில் மீண்டும் மணல் அகழ்வினை ஆரம்பிக்க முயற்சிகள் இடம்பெறுவதோடு அந்த மணல்கள் எமது மாவட்டம் எமது மாகாணத்தையும் தாண்டி கொண்டு செல்வதற்கு இடம்பெறும் இம் முயற்சியினால் மீண்டும் எவ்வளவு பிரதேசம் அகழப்படும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. அதனால் எமது பிரதேசத்திற்குள் கடல் நீர் உட்புகும் வாய்ப்பு ஏற்படுவதோடு தற்போது எஞ்சியுள்ள ஒருசில நண்ணீர் கிணறுகளும் உவர்அடையக்கூடிய அச்சம் கானப்படுகின்றது.
இதேவேளை ஏ32 வீதியில் இருந்து எமது கிராமத்மிற்கு வரும் ஒரேயொரு வீதியான 10மைல் தூரத்தில் இருக்கும் எமது கிராமத்திற்கான பாதையானது யுத்தத்தின் பின்னர் இன்றுவரை சீர் அமைக்கப்படாத தன்மையே கானப்படுகின்றது. புனரமைப்பிற்கான நிதி அனுமதி கிடைத்தும் அதற்கான கிரவல் பெறுவதில் உள்ள தடங்கள் காரணமாக இன்றுவரை செப்பனிடமுடியவில்லை. இவற்றிற்கு எல்லாம் நடவடிக்கையினை எடுக்காத அதிகாரிகள் இங்குள்ள வளத்தினை மட்டும் அள்ளுச் செல்ல முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவே இதனை உரியவர்கள் மறுபரிசீலணை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் பூநகரிப் பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
இப் பகுதியில் ஆரம்பகாலத்தில் சிலர் சட்ட விரோதமாகவும் மணல் அகழ்வதாக அப்பகுதி மக்கள் பலமுறை சுட்டிகாட்டினர். இதனால் அப்பகுதியில் மணல் அகழ்வு தடைசெய்யப்பட்டதோடு அது தொடர்பில் ஓர் ஆய்வு செய்யப்பட்டது. இதற்கமைய அப்பகுதியில் மணல் அகழ்விற்காக 14 பேர் விண்ணப்பித்மிருந்தனர். இருப்பினும் அநேகமானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு சிலரின் விண்ணப்பங்கள் பிரதேச செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் எமது அனுமதி பங்கு கிடையாது.
மணல் அகழ்வு செய்ய கோருகின்ற பிரதேசத்தின் உரிமை உறுதிப்படுத்தல் அதிகாரம் மட்டுமே எமது கடமையாகும் . இருப்பினும் குறித்த விண்ணப்பதாரிகளின் நில உரிமை தொடர்பான ஆய்வு தற்போதே இடம்பெறுகின்றது. அந்த ஆய்வின் பின்னரே இறுதி அறிக்கை அனுப்பி வைக்கப்படும் . இவர்களிற்கான அனுமதியை வழங்கும் அதிகாரம் கனியவளத் திணைக்களத்தின் வரையறைக்கு உட்பட்டது. என்றார். –

Comments

தொடர்புடைய செய்திகள்