Home / உலகம் /

மிகவும் குறுகிய வாக்குவீதத்தில் மனுவல்வால்ஸ்!!

Posted On : June 19, 2017

எவ்ரி (EVRY) தொகுதியில் போட்டியிட்ட, முன்னாள் பிரதமர் மனுவல் வால்ஸ், மிகவும் குறுகிய வாக்கு வீதத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அர்மானிக்கும் ( Farida Amrani) இவரிற்கும் கடுமையான போட்டி நிலவியது.

மனுவல் வால்ஸ் 50.3% வாக்குகளை மட்டுமே பெற்று, வெறும் 139 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். “நான் இந்த வெற்றிக்காகத் தலை வணங்குகின்றேன், வாக்களிக்க வந்தவர்களிற்கும் வராதவர்களிற்குமான பாராளுமன்ற உறுப்பினராக நான் இருப்பேன்” என மனுவல் வால்ஸ் தெரிவித்துள்ளார்.

இவரின் வெற்றியை, இவரை எதிர்ப்பவர்கள் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்