Home / உலகம் /

லண்டனில் மசூதி அருகே வேன் மோதித் தாக்குதல்

Posted On : June 19, 2017

லண்டனில், மசூதிக்கு அருகே பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

லண்டன் ’செவன் சிஸ்டர்ஸ்’ சாலையில், பிரிட்டன் நேரப்படி நள்ளிரவு 12.20 மணி அளவில் மசூதிக்கு அருகே நடைபாதையில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதி, பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. மசூதிக்கு அருகே ரமலான் நோன்பை நிறைவுசெய்துவிட்டு வெளியில் வந்தவர்கள் மீது அந்த வேன் மோதியுள்ளது. இந்த விபத்து வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதுபோல இருப்பதாக, விபத்தை நேரில் கண்டவர்கள் சாட்சியளித்துள்ளனர்.

இந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். காயமடைந்தோர், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தை பெரும் விபத்தாகவே கருதுவதாக லண்டன் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கோர விபத்துக்கு தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார், பிரிட்டன் பிரதமர் தெரேசா மே.

விபத்து நடந்த பகுதியில், மீட்புப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. காயமடைந்துள்ளவர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால் நிலைமை பதற்றமாக உள்ளதென, நகர போலீஸார் தெரிவித்துள்ளனர். ’இங்கிலாந்தில், இஸ்லாமியர்கள் இணைந்து செயல்படுவதற்கான சூழல் அமைய வேண்டும்’ என இஸ்லாமிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்