Home / உலகம் / அவுஸ்ரேலியா /

அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் பரவிய தீ

Posted On : July 14, 2017

அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் பரவிய தீ காரணமாக சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீயினால் சுமார் 4 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து மெல்பேர்னில் உள்ள மீள் சுழற்சி மையத்திலேயே ஏற்பட்டுள்ளது.

தீ பரவியமைக்கான காரணம் தொடர்பில் இதுவரை தெரியவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், தீ பரவல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்