Home / சினிமா / TAMIL MOVIES TRAILER /

அனிருத் – விக்னேஷ் சிவனின் அடுத்த ஹிட்

Posted On : July 29, 2017

வணக்கம் சென்னை படத்தில் எங்கடி பொறந்தே, என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு, மாரியில் தப்பாதான் தெரியும், நானும் ரெளடிதான் படத்தில் தங்கமே உன்னைத்தான், என்னை மட்டும் காதலி, ரெமோவில் வாடி என் தமிழ்ச்செல்வி, செஞ்சிட்டாளே என பல பாடல்களை எழுதியவர் இயக்குனர் விக்னேஷ்சிவன். இதில் என்னை அறிந்தால் பாடல் தவிர மற்ற அனைத்து பாடல்களையும் அனிருத் இசையில் தான் எழுதியிருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது சூர்யாவைக் கொண்டு தான் இயக்கியுள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் அனிருத் இசையில் நானா தானா வேணா போனா என்ற பாடலையும் எழுதியிருக்கிறார் விக்னேஷ்சிவன். இந்த பாடலின் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றிருக்கிறதாம். ஆக, அனிருத் – விக்னேஷ் சிவனின் ஹிட் பாடல் வரிசையில் இந்த பாடலும் இடம்பிடிக்கப்போகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்