Home / சினிமா / இந்திய சினிமா /

4 சீனில் நடிக்க ரூ.40 லட்சம் வாங்கிய நடிகை

Posted On : August 12, 2017

இளம் நடிகைகள் பலர் சிங்கிள் டிஜிட் சம்பளம்தான் வாங்கிக்கொண்டிருக்கின்றனர். சீனியர் நடிகைகள் பலர் வாய்ப்பில்லாமல் டி.வியில் தலைகாட்டி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சீனியர் நடிகை வாணி விஸ்வநாத் 4 சீன்களில் நடிக்க டபுள் டிஜிட் சம்பளம் வாங்கியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மண்ணுக்குள் வைரம், நல்லவன், பூந்தோட்ட காவல்காரன், இதய திருடன் உள்ளிட்ட பல தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழியில் பல்வேறு படங்களிலும் நடித்திருப்பவர் வாணி விஸ்வநாத்.

தெலுங்கில் பயோபதி சீனு இயக்கும் புதிய படம் ‘ஜெய ஜானகி நாயகா’. இதில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயின். பெரிய தொகையை சம்பளமாக பெற்று கேத்ரின் தெரசா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். இதில் 4 காட்சிகள் மட்டுமே தோன்றும் கெஸ்ட் ரோலில் நடிக்க சீனியர் நடிகையை தேடிக்கொண்டிருந்தனர். வாணி விஸ்வநாத் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து அவரை அணுகியபோது, ‘நான்கு சீனில் நடிக்க ரூ. 40 லட்சம் தரவேண்டும் என்று கேட்டார்.

அதற்கு ஓ கே சொன்னதையடுத்து நடிக்க ஒப்புக்கொண்டார். இதுபற்றி இயக்குனர் கூறும் போது,’முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமானவராக வாணி விஸ்வநாத் இருந்தார். 4 சீனில் நடிக்க அவருக்கு 40 லட்சம் சம்பளம் தரப்பட்டது. அப்படியென்றால் அந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளலாம்’ என்றார்.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்