Home / உலகம் /

வட கொரியா: நீர்மூழ்கி ஏவுகணை பரிசோதனை செய்வதாக அதிர்ச்சி தகவல்

Posted On : August 13, 2017
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி பதற்றத்தை உருவாக்கியது வட கொரியா.  தற்போது நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவுகணைகளை செலுத்தி பரிசோதனை நடத்த அது முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடுவதை உளவு செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
வட கொரியாவிடமுள்ள புகுகுக்சோங் -1 எனும் பெயர் கொண்ட நீர்மூழ்கி ஏவுகணை வசதியை மேம்படுத்த முயல்வதாக ராணுவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இந்த நீர்மூழ்கி ஏவுகணை வட கொரியா முதல் முறையாக வெற்றிகரமாக ஏவி பரிசோதித்தது.
ஏற்கனவே அமெரிக்காவின் பெரும்நிலப்பரப்பை தன்னுடைய ஏவுகணை தாக்குதல் பரப்பிற்குள் கொண்டு வந்துள்ளதாக சொல்லப்படும் வட கொரியா அடுத்ததாக நீர்மூழ்கி ஏவுகணை பரிசோதனையிலும் இறங்கியிருப்பது மேலும் பதற்றத்தையே ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் வட கொரியா மீது தாக்குதல் நடத்தத் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்