Home / உலகம் / சுவிஸ் /

சுவிஸில் நடுவானில் பறந்த விமானம்.. திடீரென தரையில் மோதி விபத்து

Posted On : August 14, 2017

சுவிட்சர்லாந்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று திடீரென தரையில் மோதி விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Freiburg மாகாணம், Corbières அருகில் உள்ள மேய்ச்சல் தரையிலே விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது, இந்த விபத்தில் ஜெனீவாவை சேர்ந்த 42 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த சிறிய ரக விமானம் Vaud மாகாண விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விபத்து நடந்த இடம் அணுக மிகவும் எளிதானது அல்ல என்பதால், உடைந்த விமானத்தின் பாகங்களை மீட்க ஹெலிகொப்டர் உதவி தேவை என கூறப்படுகிறது.

விபத்திற்கான காரணம் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைக்காக சுவிஸ் பாதுகாப்பு விசாரணை மையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்