Home / உலகம் / பிரித்தானியா /

பிரித்தானியா குருட்டுத் தனமான விசுவாசத்தை காட்ட வேண்டாம்: எச்சரிக்கும் ஜெரேமி கோர்பைன்

Posted On : August 14, 2017

பிரித்தானிய அரசு வடகொரியா மற்றும் அமெரிக்கா விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று ஜெரேமி கோர்பைன் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் பீதியில் உள்ளன.

வடகொரியாவின் இந்த செயல்களை அடக்க வேண்டும் என்று அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதனால் வடகொரியாவின் மீது மீண்டும் புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இந்த புதிய பொருளாதார தடை, இறையாண்மைக்கு எதிரானது என வடகொரியா தெரிவித்திருந்தது.

அதுமட்டுமின்றி தற்போது நாங்கள் கண்டுபிடித்துள்ள ஏவுகணை சோதனை அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கும் வல்லை கொண்டது எனவும் கூறப்பட்டது.

இதையடுத்து அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் பிரித்தானியாவின் எதிர்கட்சித் தலைவரான ஜெரேமி கோர்பைன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், வடகொரியா-அமெரிக்க விவகாரத்தில் பிரித்தானியா தலையிட வேண்டாம் என்றும் அமெரிக்காவிற்கு குருட்டுத் தனமான விசுவாசத்தை காட்ட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மேலும் கொரியாவில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க பிரித்தானியா உதவலாம், மாறாக அந்த பிரச்சனையில் பிரித்தானியா நுழைத்திட வேண்டாம்.

எந்த நாட்டுக்கும் ஆதரவாக போர் ஒத்திகையில் கூட பிரித்தானியா ஈடுபட வேண்டாம் என்று ஜெரேமி கோர்பைன் வலியுறுத்தியுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்