Home / உலகம் / பிரித்தானியா /

பிரித்தானியா வானிலை குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

Posted On : August 14, 2017

பிரித்தானியாவில் இந்த வாரம் முழுவதும் கனத்த மழையுடன் புயல் காற்று அதிகளவில் வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் புயல் காற்று காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மழை ஓய்ந்து 24 டிகிரி அளவு இதமான வெயில் அடித்தது.

இதையடுத்து இரண்டு லட்சம் பிரித்தானிய மக்கள் கடற்கரை பகுதிகளை நோக்கி கடந்த இரு தினங்களாக படை எடுத்தனர்.

இந்நிலையில், இன்றிலிருந்து மீண்டும் கனமழை பொழியும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், இன்றிலிருந்து மழை மீண்டும் ஆரம்பமாகும் எனவும், இந்த வாரத்தின் நடுவில் மழையானது அதிகமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதோடு மணிக்கு 50 மீட்டர் அளவு பலத்த காற்று வீசும் என்றும், தென் கிழக்கு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு சாலை போக்குவரத்தில் இடையூறு ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதாவது பிரித்தானியாவின் சில பகுதிகளில் 40 மில்லி மீட்டர் அளவு கனமழை பொழியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வாளர் Mark Wilson கூறுகையில், இன்றும், நாளையும் மழை நன்றாக பொழியும் அதே நேரத்தில் புதன்கிழமை ஈரப்பதத்துடன் பலத்த காற்று வீசும்.

முக்கியமாக கடலோர பகுதிகளில் அதிக காற்று வீசும் மற்றும் வெப்பநிலையானது சராசரிக்கும் குறைவாகவே இருக்கும் என கூறியுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்