Home / உலகம் / பிரித்தானியா /

லண்டனில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த பேருந்து: அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்

Posted On : August 14, 2017

லண்டனில் இரட்டை அடுக்கு பேருந்து நடுரோட்டில் தீப்பற்றி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட பயணிகள் அனைவரும் உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Route 113 வழியில் செல்லும் இரட்டை அடுக்கு பேருந்தே Finchley சாலையில் தீப்பற்றி எரிந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் 10 நிமிடத்தில் தீயை அணைத்துள்ளனர்.

தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக லண்டன் போக்குவரத்து துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்