Home / உலகம் / பிரித்தானியா /

அகதிகள் செய்த செயல்: சாலையில் கைது செய்த பொலிசார்

Posted On : August 16, 2017

பிரித்தானியாவில் லொறியில் பொலிசார் கண்ணில் படாமல் தப்பி செல்ல முயன்ற சிறுவர்கள் உட்பட 7 அகதிகளை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

பிரித்தானியாவின் Northants கவுண்டியில் பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள்.

அப்போது லொறியை சோதனை செய்த போது அதன் உள்ளே 4 சிறுவர்கள் உட்பட மொத்தம் 7 அகதிகள் மறைந்திருந்தார்கள்.

எல்லையில் செய்யப்படும் சோதனைகளிலிருந்து தப்பிக்க அவர்கள் இதை செய்திருக்கலாம் என தெரிகிறது.

ஏழு அகதிகளும் ஈராக் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், Czech Republic-லிருந்து லொறியில் வரும் போது பொலிசாரிடம் சிக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு அருகில் இருந்த Mez Sharp என்ற பெண் கூறுகையில், மருத்துவர்கள் ஏழு அகதிகளின் உடல்நிலையை பரிசோதித்தார்கள்.

லொறியில் பிடிப்பட்ட 4 சிறுவர்களும் மிகவும் கவலையாகவும், குழப்பமான மனநிலையிலும் இருந்தார்கள் என கூறியுள்ளார்.

இதையடுத்து அகதிகளை கைது செய்த பொலிசார் அவர்களை குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்