Home / உலகம் / பிரித்தானியா /

ஒரே நாளில் £800,000 மதிப்புடைய சொத்துக்களை அள்ளிய அதிர்ஷ்ட பெண்மணி

Posted On : August 16, 2017

குலுக்கல் சீட்டு முறையில் பெண் ஒருவருக்கு £800,000 மதிப்புள்ள வீடு பரிசாக கிடைத்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானியாவின் Warrington நகரை சேர்ந்த Marie Segar என்ற பெண் தான் அந்த அதிர்ஷ்டசாலி.

Dunstan Low (37) என்ற நபருக்கு Lancashire பகுதியில் அரண்மனை போன்ற மிக பெரிய வீடு உள்ளது. வீட்டில் சகலவிதமான வசதிகள் உள்ளன.

வீடானது ஒதுக்குபுற பகுதியில் இருந்ததால் அவரால் பணிக்கு செல்ல முடியவில்லை. இதனால் Dunstanன் வருமானம் குறைய ஆரம்பித்தது.

இதையடித்து வீட்டை விற்க முடிவு செய்த Dunstan வீடு விற்பனைக்கு உள்ளது என விளம்பரம் கொடுத்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் வீட்டை வாங்க யாரும் வரவில்லை.

வேறு வழி மூலமாக வீட்டை விற்க முடிவு செய்த Dunstan குலுக்கல் பரிசு சீட்டு முறைப்படி வீட்டை விற்க தயாரானார்.

அதன்படி £2 என்ற அளவில் ஒரு குலுக்கல் சீட்டை விற்றார். பல ஆயிரக்கணக்கானோர் குலுக்கல் சீட்டை வாங்கினார்கள்.

இதன் லாபத்திலேயே Dunstanக்கு பெருமளவு பணம் வசூலானது.

இந்நிலையில் Marie, £20 கொடுத்து சீட்டுகளை வாங்கினார். இறுதியில் அவருக்கே குலுக்கல் சீட்டு முடிவில் பிரம்மாண்ட வீடு பரிசாக விழுந்துள்ளது.

Marie கூறுகையில், எனக்கு இது இன்ப அதிர்ச்சியாக உள்ளது, இவ்வளவு பெரிய பரிசை நான் இதுவரை வென்றதில்லை.

அதிகபட்சமாக £9 பணம் தான் லாட்டரியில் வென்றுள்ளேன் என கூறியுள்ளார்.

வீட்டை விற்ற Dunstan கூறுகையில், இந்த காரியத்தை செய்ததில் எனக்கு வருத்தமில்லை. இது அற்புதமான அனுபவமாக இருந்தது என கூறியுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்