Home / உலகம் / சுவிஸ் /

சிங்கப்பூரில் சுவிஸ் குடிமகனுக்கு சிறை தண்டனை

Posted On : August 16, 2017

சுவிட்சர்லாந்து நாட்டு குடிமகன் ஒருவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 4 வாரங்கள் சிறை தண்டனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த Yannick Alexandre Varidel(28) என்பவர் தனது தோழியுடன் சிங்கப்பூர் சென்றுள்ளார்.

கடந்த மார்ச் 18-ம் திகதி கால் டாக்ஸி ஒன்றை அழைத்துள்ளார். Ng Hong Poh(53) என்ற ஓட்டி வந்த காரில் இருவரும் அமர்ந்துள்ளனர்.

கார் புறப்படுவதற்கு முன்னதாக, ‘கட்டணத்தை பணமாக கொடுத்து விடுங்கள். ஏ.டி.எம் வசதி என்னிடம் இல்லை’ என ஓட்டுனர் கூறியுள்ளார்.

இதற்கு இருவரும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், சில நிமிடங்களுக்கு பின்னர் காரை விட்டு இருவரும் இறங்கியபோது சுவிஸ் குடிமகன் டெபிட் கார்டை கொடுத்துள்ளார்.

’என்னிடம் இந்த வசதி இல்லை. பணமாக கொடுங்கள்’ என ஓட்டுனர் கேட்டுள்ளார்.

‘என்னிடம் பணம் இல்லை. டெபிட் கார்ட் தான் உள்ளது’ என ஓட்டுனரிடம் கார்டை கொடுத்துள்ளார்.

சுவிஸ் குடிமகன் கொடுத்த கார்டை திரும்ப அவரிடம் கொடுக்க முயன்றபோது அது தவறுதலாக கீழே விழுந்துள்ளது.

கார்ட் கீழே விழுந்ததை கண்டு ஆத்திரம் அடைந்த சுவிஸ் குடிமகன் ஓட்டுனரின் முகத்தில் பலமாக குத்தியுள்ளார்.

இதில் காயம் அடைந்த ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக சுவிஸ் குடிமகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை இன்று சிங்கப்பூர் நீதிமன்றத்திற்கு வந்தபோது, சுவிஸ் குடிமகனுக்கு 4 வாரங்கள் சிறை தண்டனை விதிப்பதாக கூறி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்