Home / உலகம் / பிரான்ஸ் /

மிருகவதைக்கு எதிராக போராட்டத்தில் குதித்த நபர்: எருதுச்சண்டை விழாவில் பரபரப்பு

Posted On : August 16, 2017

பிரான்சில் எருதுச்சண்டை நடக்கும் அரங்கில் விலங்கு நல ஆர்வலர் ஒருவர் குதித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் கோடைகால கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய எருதுச்சண்டை விழாவின் ஒரு அரங்கில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

எருதுச்சண்டை அரங்கில் குதித்த அந்த நபர், மிருக துன்புறுத்தலுக்கு எதிரான கருத்துகளை தமது உடம்பில் எழுதி வைத்திருந்துள்ளார்.

அதில், ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரோன் அவர்களே உங்களால் தான் இதை தடுத்து நிறுத்த முடியும். இது நமது பாரம்பரியமா? பாரம்பரியத்துடன் காட்டுமிராண்டித்தனத்தையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

எருதுகளை காப்பாற்றுங்கள், எருதுச்சண்டைக்கு தடை விதியுங்கள் என அந்த நபர் கூக்குரலிட்டுள்ளார்.

இதனிடையே குறித்த விலங்கு நல குழுவின் உறுப்பினர் ஒருவர், ஜனாதிபதியின் நேரடி பார்வை இந்த விவகாரத்தில் வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே அந்த நபர் எருதுச்சண்டை அரங்கில் குதித்துள்ளதாக குறிப்பிட்டார்.

மனிதர்களுக்கு தரப்படும் அதே மரியாதையை விலங்குகளுக்கும் தர வேண்டியது நமது கடமை எனவும் அந்த குழுவின் உறுப்பினர்கள் வாதிட்டுள்ளனர்.

இதனிடையே எருதுச்சண்டை அரங்கில் குதித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபரை விழா ஏற்பாட்டாளர்கள் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் அந்த நபரை பொலிசார் விடுவித்துள்ளனர்.

போராட்டத்தில் குதித்த அந்த நபர் நெதர்லாந்து நாட்டவர் எனவும், இதுவரை பிரான்சில் எருதுச்சண்டை நடைபெறும் 30க்கும் மேற்பட்ட அரங்கில் இதுபோன்று குதித்து தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

பிரான்சில் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் Bayonne விழாவனது ஆண்டு தோறும் 10 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றது.

ஆனாலும் குறித்த விழாவுக்கு எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கையும் ஆண்டு தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்