Home / உலகம் / சுவிஸ் /

சிகரெட் கொடுக்க மறுத்த வாலிபர் மீது தாக்குதல்: கோமாவில் விழுந்த பரிதாபம்

Posted On : August 17, 2017

சுவிட்சர்லாந்து நாட்டில் சிகரெட் கொடுக்க மறுத்த வாலிபரை பலமாக தாக்கியதை தொடர்ந்து அவர் தற்போது கோமா நிலையை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் உள்ள சூரிச் நகரை சேர்ந்த 21 வயதான வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார்.

ஓரிடத்தில் அனைவரும் அமர்ந்து உரையாடிக்கொண்டு இருந்தபோது, மற்றொரு வாலிபர் அவர்களிடம் சென்றுள்ளார்.

அப்போது, 21 வயதான நபரிடம் அங்கு வந்தவர் சிகரெட் கேட்டுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்தவுடன் அங்கு வந்த நபர் ‘மீண்டும் இங்கு வருவேன்’ என ஆத்திரமாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

சில நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் அதே நபர் அங்கு சென்று சிகரெட் கொடுக்க மறுத்த நபரின் முகத்தில் பலமாக தாக்கியுள்ளார்.

தாக்குதலை எதிர்பார்க்காத வாலிபர் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

வாலிபரை தாக்கிய நபர் அங்கிருந்து தப்பித்துள்ளார், தாக்கப்பட்ட நபரை அவரது நண்பகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

வாலிபரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கோமா நிலையை அடைந்து விட்டதாக வருத்ததுடன் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பேசிய வாலிபரின் உறவினர்கள் ‘தாக்கப்பட்ட நபருக்கு காதலி ஒருவர் உள்ளதாகவும், அவர் 6 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும்’ தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதல் தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், வாலிபரை தாக்கியது ஒரு சிறுவன் எனத் தெரியவந்துள்ளதால் இதுவரை கைது நடவடிக்கை எதையும் பொலிசார் மேற்கொள்ளவில்லை.

எனினும், வாலிபர் மீது தாக்குதல் நடத்தியவரை பொலிசார் விரைவில் நீதிமன்றத்தில் நிறுத்துவார்கள் என நம்பிக்கை உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்