Home / உலகம் / பிரான்ஸ் /

நீதிமன்றம் முக்கிய உத்தரவு: அகதிகள் விடயத்தில் அரசு செய்த காரியம்

Posted On : August 18, 2017

நீதிமன்ற தீர்ப்பை ஏற்று Calais நகரில் வசிக்கும் அகதிகளுக்கு தற்காலிகமாக நடமாடும் கழிப்பறைகள் மற்றும் தண்ணீர் குழாய்கள் வசதிகளை அரசு ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸின் Calais நகரில் இருந்த Jungle குடியிருப்பு முகாமில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் தங்கியிருந்தார்கள்.

இந்நிலையில் குறித்த முகாமை கலைக்கவும், அங்கிருந்த மக்களை வெளியேற்றவும் அரசு கடந்த வருடம் அக்டோபரில் உத்தவிட்டது.

இதையடுத்து முகாமிலிருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள் தண்ணீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் போன்ற அடிப்படை சுகாதார வசதிகள் இன்றி தவித்து வந்தார்கள்.

அடிப்படை வசதிகளை அரசு செய்து தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தற்போது அடிப்படை வசதிகள் அகதிகளுக்கு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து அரசு அதிகாரி Fabien Sudry கூறுகையில், 10 நடமாடும் கழிப்பறைகள் மற்றும் 7 தண்ணீர் குழாய்கள் அகதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கள் கிழமை இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும், குடியேறும் அகதிகளின் வருகை கட்டுப்பாடாற்று போய் விடக்கூடாது என்பதற்காகவே சுகாதார வசதிகள் தற்காலிகரமாக அமைக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்