பார்சிலோனா தாக்குதல்: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 11 பேர் கவலைக்கிடம்
பார்சிலோனாவில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 26 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், இவர்களில் 11 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்பெயின் தலைநகரான பார்சிலோனாவில் நேற்று மாலை 5 மணியளவில் வாகனம் ஒன்று கூட்டத்தினர் மீது பாய்ந்துள்ளது.
இத்தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.
இச்சம்பவத்திற்கு பின்னர் பொலிசார் நடத்திய வேட்டையில் சந்தேகத்திற்குரிய 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வெளியுறவு அமைச்சகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பார்சிலோனா தாக்குதலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 26 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், இவர்களில் 11 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerard Collomb பேசியபோது, ‘பார்சிலோனாவில் நிகழ்ந்த தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், தாக்குதலில் காயமுற்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்களை நேரில் சந்திக்க பார்சிலோனா செல்வதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக Gerard Collomb தெரிவித்துள்ளார்.