Home / உலகம் / கனடா /

சாலை விபத்தில் உயிர் பிழைத்த பெற்றோர்: பரிதாபமாக பலியான 3 பிள்ளைகள்

Posted On : August 19, 2017

கனடாவில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் பெற்றோர் உயிர் பிழைத்துள்ள நிலையில் அவர்களது 3 பிள்ளைகளும் படுகாயமடைந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள ஹன்னா என்ற நகரில் தான் இத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று முன் தினம் மாலை 5.45 மணியளவில் 44 வயதான தந்தை மற்றும் 32 வயதான தாயார் ஆகிய இருவரும் தங்களது 3 பிள்ளைகளுடன் காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

நெடுஞ்சாலை 36 மற்றும் 570 ஆகிய பகுதிகளில் உள்ள வளைவில் கார் சென்றபோது அந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது.

எதிரே கண்டெய்னர் ஏற்றிச்சென்ற லொறி மீது கார் பயங்கரமாக மோதியுள்ளது. கார் மோதிய வேகத்தில் சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்ட அருகில் கால்வாயில் விழுந்துள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த மீட்புக்குழுவினர் காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர்.

துரதிஷ்டவசமாக, காரில் இருந்த 16 வயது மகள், 11 வயது மகன் மற்றும் பச்சிளம் குழந்தை என மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

உயிருக்கு போராடிக்கொண்டுருந்த பெற்றோரை மீட்புக்குழுவினர் ஹெலிகொப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தற்போது பெற்றோர் இருவரும் ஆபத்தான நிலையை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

லொறியை ஓட்டி வந்த நபரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பொலிசார் நடத்திய விசாரணையில் பெற்றோர் இருவரும் அமெரிக்க தலைநகரான வாஷிங்டனை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

பெற்றோர் உயிர் பிழைத்து பிள்ளையகள் பலியாகியுள்ள விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்