Home / உலகம் / சுவிஸ் /

நிலச்சரிவில் 400 பேர் உயிரிழப்பு: உதவிக்கரம் நீட்டிய சுவிட்சர்லாந்து

Posted On : August 19, 2017

சியரா லியோனில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டிற்கு சுவிட்சர்லாந்து 4,00,000 பிராங்க் நிதி வழங்கி உதவியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியரா லியோனில் பெய்த கனமழை காரணமாக கடந்த திங்கள் கிழமை அன்று நிலச்சரிவு ஏற்பட்டது.

தலைநகர் ஃபீரிடவுனுக்கு அருகில் நிகழ்ந்த இந்நிலச்சரிவில் சிக்கி 400 பேர் வரை பலியாகியுள்ளனர். தற்போது வரை 600 பேரை காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த இயற்கை பேரிடரை தொடர்ந்து ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலையில் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சியரா லியோனிற்கு உதவி வருகின்றன.

இந்நிலையில், சுவிஸ் வெளியுறது துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இயற்கை பேரிடரால் உயிரிழப்புகளை சந்தித்துள்ள சியரா லியோனிற்கு சுவிஸ் அரசு 4,00,000 பிராங்க் நிதி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவத்திற்கு பின்னர் நோய் பரவுவதை தடுக்க தேவையான மருந்துகள் மற்றும் உதவி பொருட்களையும் அனுப்பி வைக்க சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்