Home / உலகம் / கனடா /

கனடாவில் திருமண உடையில் கைதான மணமக்கள்

Posted On : August 23, 2017

கனடா நாட்டில் மது விருந்து நிகழ்ச்சியில் தகராறில் ஈடுப்பட்ட மணமக்கள் இருவரை அந்நாட்டு பொலிசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எட்மோண்டன் நகரில் கடந்த சனிக்கிழமை அன்று 37 வயதான மணமகனுக்கும் 36 வயதான மணமகளுக்கு திருமணம் நடந்துள்ளது.

இரவு நேர்த்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மது விருந்து இரவு விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருமணமான தம்பதி இருவரும் திருமண உடையிலேயே மது விருந்தில் பங்கேற்றுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இச்சம்பவத்தில் மணமகன் தாக்குதலுக்கு உள்ளானதால் ஆத்திரம் அடைந்த மணமகள் சிலர் மீது திருப்பி தாக்குதலை நடத்தியுள்ளார்.

திருமண உடையில் இருவரும் அடிதடியில் ஈடுப்பட்ட நிலையில் இவ்விவகாரம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. விரைந்து வந்த பொலிசார் தகராறை கட்டுப்படுத்தியுள்ளனர்.

பொலிசார் விசாரணையில், தகராறுக்கு மணமக்கள் தான் காரணம் என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து திருமண உடையில் இருந்த மணமக்களின் கைகளில் பொலிசார் விலங்கு பூட்டி கைது செய்துள்ளனர்.

மேலும், அடிதடியில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக இருவர் மீதும் சட்டப்பூர்வமாக வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்