Home / உலகம் / சுவிஸ் /

படகில் சவாரி செய்த இளம்பெண்: சடலமாக கரைக்கு திரும்பிய பரிதாபம்

Posted On : August 23, 2017

சுவிட்சர்லாந்து நாட்டில் இளம்பெண் ஒருவர் படகு சவாரி செய்தபோது நிகழ்ந்த எதிர்ப்பாராத விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் சூரிச் நகரில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் நேற்று முன் தினம் சூரிச் ஏரியில் படகு சவாரி செய்துள்ளார்.

சில நிமிடங்கள் பயணத்திற்கு பின்னர் படகின் விளிம்பில் அமர்ந்துக்கொண்டு உல்லாசமாக சென்றுள்ளார்.

அப்போது, மற்றொரு படகு அருகில் வேகமாக கடந்து சென்றபோது எழுந்த அலைகள் பெண் மீது மோதியுள்ளது.

அலைகள் மோதிய வேகத்தில் பெண் நிலைத்தடுமாறி ஏரியில் விழுந்துள்ளார். பெண் கரைக்கு திரும்பாததால் மீட்புக்குழுவினர் ஹெலிகொப்டர் உதவியுடன் தேடியுள்ளனர்.

பல மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் இன்று காலை சுமார் 20 அடி ஆழத்தில் பெண் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பெண்ணின் சடலத்தை மீட்ட பொலிசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து தகவல் வெளியாகாததால் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்