Home / உலகம் / அவுஸ்ரேலியா /

மதுபான விடுதியில் இளவரசருக்கு அனுமதி மறுப்பு

Posted On : August 23, 2017

போதிய ஆவணங்கள் இல்லை என்பதால் பிரிஸ்பேன் நகரில் அமைந்துள்ள மதுபான விடுதியில் டென்மார்க் இளவரசருக்கு அனுமதி மறுத்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள மதுபான விடுதியில் டென்மார்க் இளவரசர் Frederik அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அவரது பாதுகாப்பு அதிகாரிகள் உதவியுள்ளனர்.

குயின்ஸ்லாந்து உள்ளிட்ட அவுஸ்திரேலியாவின் சில மாகாணங்களில் மது விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

மது அருந்திவிட்டு இரவு வாகனம் ஓட்டுபவர்களால் அதிக விபத்து ஏற்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, குறித்த நபர்கள் கடவுச்சீட்டு அல்லது வகனம் ஓட்டுவதற்கான உரிமம் உள்ளிட்டவைகளை காண்பித்து மதுபான விடுதிகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனிடையே பிரிஸ்பேன் நகரில் படகு விடும் விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு வந்திருந்த டென்மார்க் இளவரசர் Frederik குறித்த மதுபான விடுதிக்கு சென்றுள்ளார்.

அவரிடம் போதிய ஆவணம் இல்லை என்பதால் விடுதியில் அனுமதி மறுத்துள்ளனர். இதையடுத்து அவரது பாதுகாப்புக்கு அனுமதிக்கப்பட்டிருந்த அதிகாரிகள் பரிந்துரையின் பேரில் இளவரசருக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

இரவு நேரங்களில் மதுவினால் ஏற்படும் குற்றச்சம்பவங்களை தவிர்ப்பதற்காக இத்தகைய கட்டுப்பாடுகள் உள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இளவரசர் Frederik கடந்த 2000 ஆண்டு நடந்த சிட்னி ஒலிம்பிக் விழாவின்போது மதுபான விடுதியில் வைத்து அறிமுகமான Mary Donaldson என்பவரையே திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்