Home / உலகம் / ஜேர்மனி /

2018 போர்ஷ் கேன் அறிமுகம் செய்யப்பட்டது

Posted On : August 31, 2017
ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷ் 2018-ம் ஆண்டின் கேன் எஸ்.யு.வி. ரக மாடலை அறிமுகம் செய்துள்ளது. 2002-ம் ஆண்டு அறிமுகமான கேன் மாடல் இதுவரை 760,000 யுனிட்கள் விற்பனையாகியுள்ளன. அந்த வகையில் மூன்றாம் தலைமுறை போர்ஷ் கேன் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் மோட்டார் விழாவில் வெளியிடப்பட இருக்கிறது.
புதிய போர்ஷ் கேன் மாடலின் வெளிப்புற வடிவமைப்பு மாற்றப்பட்டு, உள்புறங்களிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய அலுமினியம் பாடி வடிவமைப்பு மற்றும் புதிய சேசிஸ் செட்டப் வாகனத்தின் எடையை குறைத்துள்ளது. கேன் மற்றும் கேன் எஸ் என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. முதல் மாடலான போர்ஷ் கேன் 3.0 லிட்டர் V6 இன்ஜின், 335bhp மற்றும் 450NM பீக் டார்கியூ கொண்டுள்ளது.
கேன் எஸ் மாடலில் 2.9 லிட்டர் ட்வின்-டர்போ V6 bhp மற்றும் 550Nm பீக் டார்கியூ கொண்டுள்ளது. இரண்டு மாடல்களும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், 4-வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் ஐந்து டிரைவிங் மோட்கள்: ஆன்-ரோடு, மட், கிரேவல், சேன்ட் மற்றும் ராக் கொண்டுள்ளது.
புதிய போர்ஷ் கேன் 0-100 கிலோமீட்டர் வேகத்தை 6.2 விநாடிகளில் செல்லும் திறன் மற்றும் அதிவேகமாக மணிக்கு 245 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இதேபோல் கேன் எஸ் மாடல் 0-100 கிலோமீட்டர் வேகத்தை 5.2 நொடிகளில் செல்லும் திறன் மற்றும் மணிக்கு 265 கிலோமீட்டர் வேகம் கொண்டிருக்கிறது.
ஃபோக்ஸ்வேகனின் MLB தளம் சார்ந்த புதிய கேன் மாடல் ஆடி கியூ7, பென்ட்லி பென்ட்யகா போன்ற மாடல்களை சார்ந்ததாகும். முந்தைய போர்ஷ் மாடலை விட புதிய மாடலின் எடை 65 கிலோ வரை குறைவு என போர்ஷ் தெரிவித்துள்ளது. இத்துடன் முந்தைய போர்ஷ் கேன் மாடலை விட 63 மில்லமீட்டர் நீளமாக இருக்கிறது. இதன் அகலம் 44 மீட்டர் உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய போர்ஷ் கேன் சேசிஸ் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, இத்துடன் இந்த எஸ்.யு.வி. விஷ்போன் ஃபிரன்ட் மற்றும் மல்டி-லின்க் ரியர் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது. இன்டீரியர் அம்சங்களை பொருத்த வரை புதிய போர்ஷ் கேன் மாடலில் 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் சென்டர் கன்சோல் ஸ்போர்ட்ஸ் டச் சென்சிட்டிவ் பட்டன்களை கொண்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்