Home / உலகம் / பிரான்ஸ் /

பாரீசில் நிர்வாண பூங்கா திறப்பு

Posted On : September 2, 2017
 பிரான்ஸ் பல நிர்வாண கடற்கரை மற்றும் நிர்வாண விடுமுறை விடுதிகளை கொண்ட நாடு. எனவே அதன் தலைநகர் பாரீசில் நிர்வாண பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.

இது பாரீஸ் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள போயிஸ் டி வின்சென்ஸ் என்ற இடத்தில் இருக்கும் பொது பூங்காவின் ஒரு பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது. கால்பந்து மைதான அளவுக்கு இப்பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது நிர்வாண விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்டது. இங்கு நிர்வாணமாக வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பூங்கா காலை 8 மணி முதல் இரவு 7.30 மணிவரை திறக்கப்படுகிறது.

இப்பூங்காவுக்கு நிர்வாண விரும்பிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஜூலியன் கிளாட் பெனகரி ஏப்பி கூறும் போது, அது உண்மையான ஆனந்தம், நிர்வாண விரும்பிகளுக்கு இது இன்னுமொரு சுதந்திரம். இந்த நகரம் திறந்த மனதுடன் இருப்பதை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போது அது ஒரு பைத்தியக்காரத்தனம் என அரசியல்வாதி ஒருவர் விமர்சித்தார். இந்த பூங்கா தற்காலிக சோதனை முயற்சியாக அக்டோபர் 15-ந்தேதி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்