இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

குறித்த பாடசாலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இரண்டு மாணவர் குழுக்களிடையே சிறு சிறு கைகலப்புகள் பிரச்சினைகள் ஏற்பட்ட வண்ணம் இருந்து வந்துள்ளது.

குறித்த இரு மாணவ குழுக்களில் ஒருவரின் பேஸ்புக் பதிவால் நேற்று பாட நேர இடைவேளையின் போது பாரிய கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் தரம்12இல் கல்வி கற்கும் சிவராசா சிவபேருசன் என்ற மாணவர் காயமடைந்து  வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவர் மீது தாக்குதல் நடாத்திய ஏனைய மூன்று மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து பெற்றோர்கள் பாடசாலையின் அதிபர் நிர்வாகத்தினரின் திரனற்ற செயற்பாடே காரணம் எனவும் மாணவர்களுக்கிடையிலான பிரச்சினையை ஆரம்பத்திலேயே தீர்த்து வைத்திருக்க வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடமாவது  தெரிவித்திருக்க வேண்டும் என குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இவ்வாறு பிரச்சினைக்குரிய மாணவர்களை உடனடியாக பாடசாலையிலிருந்து விலக்க அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் குறித்த மாணவர்களை நீதி மன்றில் ஆஜர்படத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.