Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

காஷ்மீரை நாம் உணர்வு ரீதியாக இழந்து விட்டோம் பா.ஜ.க யஷ்வந்த் சின்கா மீண்டும் சர்ச்சை பேச்சு

Posted On : October 3, 2017
காஷ்மீரை நாம் உணர்வு ரீதியாக இழந்து விட்டோம் என பாரதீய ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா பேசி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
பாரதீய ஜனதா  மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்கா அண்மையில் மத்திய அரசின் நிதி கொள்கையை விமர்சித்திருந்தார்.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் சரிந்து விட்டது. ஜிஎஸ்டி போன்றவற்றால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பல எதிர்கட்சி தலைவர்கள் ஆதரவும் , பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.  இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் அவர் மத்திய அரசின் காஷ்மீர் கொள்கையை விமர்சித்துள்ளார்.
இது குறித்து யஷ்வந்த் சின்கா தனியார் டிவி ஒன்றின் விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
 காஷ்மீரில் நிலைமை முற்றிலுமாக சீரழிந்து விட்டது. எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய ராணுவம் தற்போது போராட்டக்கார்களுடன் சண்டையிட்டு கொண்டிருக்கிறது.
காஷ்மீரில் இருக்கும் ராணுவத்தை திரும்ப பெற வேண்டும். ராணுவ படையினர் அனைத்தும் முகாம்களுக்கு திரும்ப வேண்டும். போராட்டக்காரர்களை கையாளும் விவகாரத்தை மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் உள்ளுர் போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் மக்களின் மன நிலையை அறிந்த நடவடிக்கை எடுப்பதில் திறமையானவர்கள்.
தீவிரவாதிகளை கையாள்வதில் சிஆர்பிஎப் படையினருக்கு மிகுந்த அனுபவம் உள்ளது. காஷ்மீர் மக்கள் முற்றிலுமாக இந்திய அரசு மீதான நம்பிகையை இழந்து விட்டனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்