Home / பல்சுவை / சமையல் /

சூப்பரான கோதுமை ரவை பிரியாணி

Posted On : October 3, 2017
 தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை- ஒரு கப்,
உருளைக்கிழங்கு – 1,
பச்சைப் பட்டாணி, நறுக்கிய கேரட், பீன்ஸ், – தலா கால் கப்,
வெங்காயம் – 2,
பச்சை மிளகாய் – 4,
இஞ்சி, பூண்டு – சிறிதளவு,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா – தலா ஒரு கப்,
கடலை எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
பட்டை, கிராம்பு, சோம்பு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்த பின் உப்பு சேர்த்து வேக வைத்து, உதிரியாக வடித்துக் கொள்ளவும்.

காய்கறிகளைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும். காய்கறிகள் நன்றாக வேக சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

காய்கறிகள் வெந்தவுடன் அதில் அரைத்த விழுதைச் சேர்த்து… புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி, வேக வைத்த கோதுமை ரவையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

சூப்பரான கோதுமை ரவை பிரியாணி ரெடி.

– இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Comments

தொடர்புடைய செய்திகள்