Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

ஸ்ரீநகர் ராணுவ முகாமில் தாக்குதல்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை, ராணுவ அதிகாரி வீரமரணம்

Posted On : October 3, 2017
ஸ்ரீநகர் ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய இரண்டு ஜெய்ஷ் தற்கொலை பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எல்லைப் பாதுகாப்பு படை முகாமில் அதிகாலை 4 மணியளவில் தற்கொலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஒரு பயங்கரவாதி நுழைவு வாயிலில் நுழையும் போதே சுட்டுக் கொல்லப்பட்டான். இரு பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்ட வண்ணம் முகாமில் இருந்த நிர்வாக மைய கட்டிடத்திற்குள் நுழைந்துவிட்டனர். கட்டிடத்திற்குள் மறைந்த வண்ணம் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு படை பதிலடியை கொடுத்தது.
சண்டையில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ச்சியாக அங்கு துப்பாக்கி சண்டை நடைபெற்றது. ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள பாதுகாப்பு படை முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், விமான சேவையானது உடனடியாக நிறுத்தப்பட்டது. ஸ்ரீநகர் விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிஉயர் உஷார் நிலையில் நிறுத்தப்பட்டது.
எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் மத்திய ரிசர்வ் படை போலீஸ் அதிகாரிகளின் பயிற்சி மையங்கள் மற்றும் வீடுகள் அமைந்து உள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து காஷ்மீர் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதியை சுற்றி உள்ள பள்ளிகள் மூடப்பட்டது, விமான நிலையத்திலும் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டு உள்ளது.
ஜெய்ஷ்
இரு பயங்கரவாதிகள் கட்டிடத்திற்கு மறைந்து இருந்து தாக்குதல் நடத்திய நிலையில், தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது. ஆகஸ்ட் 26-ம் தேதி புல்வாமாவில் போலீஸ் படையை குறிவைத்து பயங்கரவாதிகள் இதுபோன்று தாக்குதல் நடத்தினர், இதில் 8 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நடத்திய மூன்று ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் ஜெயஷ் பயங்கரவாத இயக்கம் முன்னெடுத்து உள்ளது.
ராணுவ அதிகாரி உயிரிழப்பு
இதற்கிடையே மீதம் இருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. சண்டையில் மேலும் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது. இதற்கிடையே காயம் அடைந்த எல்லைப் பாதுகாப்பு படையின் உதவி சப்-இன்ஸ்பெக்டர்  வீர மரணம் அடைந்தார்.
முகாமில் பதுங்கியிருக்கும் ஒரு பயங்கரவாதி தொடர்ச்சியாக தாக்குதலில் ஈடுபட்டு உள்ளான், அவனையும் வேட்டையாடும் பணியில் பாதுகாப்பு படை தீவிரமாக இறங்கி உள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்