Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் காயம்

Posted On : October 5, 2017
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம், பூஞ்ச் செக்டார் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள், எல்லையோர கிராம பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று அதிகாலை அத்துமீறிய தாக்குதலை தொடுத்தது.

சிறிய ரக பீரங்கிகள் மற்றும் தானியங்கி ஆயுதங்களால் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, நமது வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டதில் இந்திய வீரர்கள் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்