Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

ராகுல் காந்தி இத்தாலி கண்ணாடியை அணிந்து கொண்டு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி தெரியாது அமித்ஷா தாக்கு

Posted On : October 10, 2017
ராகுல் காந்தி இத்தாலி கண்ணாடியை அணிந்து கொண்டு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி தெரியாது என பாதீய ஜனதா தலைவர் அமித்ஷா கூறி உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  காங்கிரஸ் துணைத்தலைவர்  தொகுதியான  அமேதியில் இன்று பாரதீய ஜனதா தலைவர்கள் அமித்ஷா மற்றும்  ஸ்மிருதி இரானி ஆகியோர் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். அங்கு நடந்த மிக பெரிய பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா பேசியதாவது:-

மோடி அரசு ஏழைகளுக்குத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.  ராகுல் காந்தி இத்தாலி கண்ணாடியை அணிந்து கொண்டு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி தெரியாது.  காங்கிரஸ்  போல் இல்லாமல் பாரதீய ஜனதா ஒரு பேசக்கூடிய பிரதமரை கொடுத்து உள்ளது. நீங்கள் பாரதீய ஜனதாவையும் பிரதமர் மோடியையும் நம்புங்கள் எப்போதும் கைவிடப்படமாட்டீர்கள். 3 சதாப்தங்களாக  காங்கிரஸ் அமேதி தொகுதியில் என்ன செய்து உள்ளது.

குஜராத்தின் வளர்ச்சி குறித்து  மக்கள் அறிந்திருக்கிறார்கள். ராகுல் காந்தி அமேதி தொகுதியை  அழித்தார். அமேதி தொகுதிக்காக காங்கிரசும் ராகுல் காந்தியும் என்ன செய்தார்கள். அமேதி தொகுதியில் உள்ள 5 சட்ட சபை தொகுதிகளில் 4 தொகுதியை கைப்பற்றும். அமேதி மக்கள் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவளிப்பார்கள். ராகுல் காந்தி அமேதி தொகுதிக்கு ஏன் முன்னுரிமை கொடுக்கவில்லை.   2022 ஆம் ஆண்டு உத்தரபிரதேசம் குஜராத்தை போல் வளர்ச்சி அடையும்.

ராகுல் காந்தி  குஜராத்தில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு முதலில் தனது அமேதி தொகுதியில் கவனம் செலுத்தட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

தொடர்புடைய செய்திகள்