Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

கண்டி புகையிரத நிலைய நுழைவுச்சீட்டு கவுண்டர் தற்காலிகமாக மூடல்

Posted On : October 11, 2017

சாதாரண புகையிரத நுழைவுச்சீட்டினை வெளிநாட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்த கண்டி புகையிரத நிலைய நுழைவுச்சீட்டு கவுண்டர் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் மற்றும் வேறு தரப்பினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து நடத்திய விசாரணைகளின் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக புகையிரத பொது மேலாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய புகையிரத ஒழுக்காற்றுக்குழு அது தொடர்பிலான அறிக்கையை புகையிரத மேலாளருக்கு வழங்கியுள்ளது.

அதன்படி கண்டி புகையிரத நிலையத்தின் நுழைவுச்சீட்டு கவுண்டர் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நுழைவுச்சீட்டு கவுண்டர் வாடகை அடிப்படையில் உள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமானது என புகையிரத பொது மேலாளர் எஸ்.எம்.அபேவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்