Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

காஷ்மீரில் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் வங்கியை கொள்ளையடித்தனர்

Posted On : October 13, 2017
ஜம்மு காஷ்மீரில் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் வங்கியை கொள்ளையடித்து உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு பாகிஸ்தானில் இருந்து வரும் நிதி முடங்கி உள்ளது. பாகிஸ்தானில் இருந்து பிரிவினைவாதிகளுக்கு பணம் வந்தது தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் பயங்கரவாத செயல்களுக்கான பயங்கரவாத நிதியக வலைபின்னல் முடங்கி உள்ளது. இந்நிலையில் பயங்கரவாதிகள் வங்கிகளை கொள்ளையடிக்கும் முயற்சியும் காஷ்மீரில் நடந்து வருகிறது. இன்று பயங்கரவாதிகள் வங்கியை கொள்ளையடித்து உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெகராவில் உள்ள வங்கியில் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் புகுந்து கொள்ளையடித்து உள்ளனர். வங்கியில் இருந்து பயங்கரவாதிகள் ரூ. 5,39,000 கொள்ளையடித்து உள்ளனர் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு கிடைக்கும் நிதியை முடக்க பாதுகாப்பு முகமைகள் தீவிரமாக செயல்பட்டு வருவதால் பயங்கரவாதிகளுக்கு பணம் கிடைக்காத நிலையே காணப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் வங்கிகளை குறிவைக்கிறார்கள். இதற்கிடையே வங்கியில் இருந்து பயங்கரவாதிகள் பல லட்சம் ரூபாயை கொள்ளையடித்து உள்ளனர் எனவும் வங்கி அதிகாரிகள் எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பதை கணக்கு செய்தால் மட்டுமே உண்மையான பணத்தின் அளவு தெரியவரும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பயங்கரவாதிகளை வேட்டையாட தேவையான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
வங்கிக்குள் 4 பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் நுழைந்து பணத்தை கொள்ளையடித்து உள்ளனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்