Home / விளையாட்டு /

புரோ கபடி லீக் போட்டி: தமிழ் தலைவாஸ் – பெங்கால் இன்று மோதல்

Posted On : October 13, 2017
 5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி தொடர் நடந்து வருகிறது. இன்று இரவு 9 மணிக்கு நடக்கும். ‘லீக்’ ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோது கின்றன.ஏற்கனவே ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட தமிழ் தலைவாஸ் ஆறுதல் வெற்றிக்காக போராடும் அந்த அணி 20 ஆட்டத்தில் 5 வெற்றி, 13 தோல்வி, 2 ‘டை’யுடன் 40 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. பெங்கால் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.

முன்னதாக இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள குஜராத்- புனே அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.

Comments

தொடர்புடைய செய்திகள்