Home / சினிமா / இந்திய சினிமா /

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை நேரில் சந்தித்த ஜி.வி.பிரகாஷ்

Posted On : October 13, 2017

ஹார்வேர்ட் தமிழ் இருக்கை தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கூறியதாவது, ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்திய தமிழரோடு இனிய சந்திப்பு. ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக ஒன்றாக இணைவதில் பெருமை என்று கூறியுள்ளார்.

உலகின் பழமையான மொழிகளுக்கெல்லாம் ஹார்வேர்டில் தனித்துறை உள்ளது. ஆனால், தமிழ் மொழிக்கு இல்லை. தமிழுக்குத் தனித்துறையை தொடங்க வேண்டும் என்றால் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்துக்கு ரூ.42 கோடி வழங்க வேண்டும். உலக அளவில் பெயர் பெற்ற ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கை அமைக்க கடந்த 20 ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது அனுமதி கிடைத்துள்ளது.

ரூ.42 கோடியில், ரூ.21 கோடியை உலகில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளும் அமெரிக்க வாழ் தமிழ் மக்களும் தந்து உதவியுள்ளார்கள். மீதமுள்ள 21 கோடியை வரும் 2018ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என ஹார்வேர்ட் தமிழ் இருக்கை அமைப்பு சமீபத்தில் தெரிவித்தது.

இதுகுறித்த கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட ஜி.வி.பிரகாஷ், தமிழ் இருக்கை அமைய தனது தனிப்பட்ட நன்கொடையைக் காசோலையாக அளித்தார். மேலும், ஹார்வேர்ட் தமிழ் இருக்கைக்காக ஒரு பாடலை இசையமைத்து கோவை பிஎஸ்ஜி கல்லூரி மாணவர் ஆதி ராஜாவுடன் பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்