Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

ஜம்மு காஷ்மீரில் 2 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ராணுவம் அதிரடி

Posted On : October 14, 2017
 பாகிஸ்தானில் இருந்து நாசவேலையில் ஈடுபடும் நோக்கத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் ஊடுருவிய பயங்கரவாதிகளை வேட்டையாட ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் லிட்டர் கிராமத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை ராணுவம் சுற்றி வளைத்தது. அப்போது பயங்கரவாகிள் ராணுவத்தை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். ராணுவமும் பதிலடி கொடுத்தது.

இரு தரப்பினருக்குமிடையே நீண்ட நேரம் நடந்த கடும் துப்பாக்கி சண்டையில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த வாசிம்ஷா, ஹபீஸ் நிசார் என்பது தெரியவந்துள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்