Home / உலகம் /

நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்; 13 பேர் பலி

Posted On : October 24, 2017
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அப்பாவி மக்கள் மீது இவர்கள் தாக்குதல் நடத்தி, அவர்களை கொன்று குவிப்பதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

நாட்டில் பல்வேறு நகரங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள நகரங்களில் இருந்து தப்பி வந்த மக்கள் மயிடுகுரி மாகாணத்தில் உள்ள மூனா கேரஜ் என்கிற நகரில் முகாமிட்டு தங்கி உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை இங்கு வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர்.

மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இந்த தாக்குதலை போகோஹரம் பயங்கரவாதிகள்தான் நடத்தியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்