Home / பல்சுவை / சமையல் /

சத்தான டிபன் பிரண்டை சிறுதானிய தோசை

Posted On : October 31, 2017
 தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி – கால் கப்
வரகு அரிசி – கால் கப்
சாமை அரிசி – கால் கப்
தினை அரிசி – கால் கப்
உளுந்து – கால் கப்
வெந்தயம்  – சிறிது
நுனி கொழுந்து பிரண்டை துண்டுகள் – 13
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை :

வரகு, சாமை, தினை, குதிரைவாலி அரிசிகளை ஒன்றாகவும், வெந்தயம், உளுந்தையும் ஒன்றாகவும் 3 மணி நேரம் ஊற வைத்து நன்றாக ஊறியதும் நைசாக அரைத்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

பிரண்டையின் ஓரங்களில் உள்ள நரம்பை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரண்டையை போட்டு நன்றாக வதக்கி ஆற விடவும்.

நன்றாக ஆறியவுடன் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வரகு அரிசி மாவுடன் கலந்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை தோசையாக ஊற்றி மூடி, இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.

சத்து நிறைந்த பிரண்டை சிறுதானிய தோசை ரெடி.

– இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Comments

தொடர்புடைய செய்திகள்