Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

மழை, வெள்ளத் தடுப்புப் பணியில் பழனிசாமி அரசு மெத்தனம்: தினகரன் குற்றச்சாட்டு

Posted On : November 3, 2017

மழை, வெள்ளத் தடுப்புப் பணியில் எடப்பாடி பழனிசாமி அரசு மெத்தனமாக செயல்படுவதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தஞ்சாவூரில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”டெங்கு காய்ச்சலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் கோட்டைவிட்டது போல, எடப்பாடி பழனிசாமி அரசு மழை வெள்ளத்திலும் கோட்டைவிட்டுள்ளது. நாம் அச்சப்பட்டது போலவே, உயிர்ப் பலிகள் நடக்க ஆரம்பித்து விட்டன. மழை வெள்ளத்தால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமலிருக்க இனியாவது தமிழக அரசு விழித்துக்கொண்டு செயல்பட வேண்டும்.

நிச்சயம் இந்த ஆட்சி, நீதிமன்ற உத்தரவுடன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்படும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். வரும் தை மாதத்துக்குள் இந்த மக்கள் விரோத ஆட்சியை மக்களே வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். தமிழகத்தில் விரைவில் நல்லாட்சி மலரும்” என்று தினகரன் கூறியுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்