Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

யாசின் மாலிக்குக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

Posted On : November 4, 2017

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் மற்றும் இருவருக்கு அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் (ஃபெமா) கீழ் அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது:

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் மற்றும் ஸ்ரீநகரச் சேர்ந்த தம்பதிக்கு ஃபெமா சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரைச் சேர்ந்த முஷ்தாக் அகமது தர், அவரது மனைவி ஷமீமா என்கிற ஷாஜியா என்கிற பிட்டி ஆகிய இருவரிடமிருந்து கடந்த 2001-ம் ஆண்டு 1 லட்சம் அமெரிக்க டாலர்களை (அப்போதைய ரூபாய் மதிப்பில் 48.23 லட்சம்) ஜம்மு காஷ்மீர் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், யாசின் மாலிக் வசம் ஒப்படைப்பதற்காக நேபாளத்தில் ஒருவரிடமிருந்து பணத்தை பெற்றதாக தெரிவித் தனர்.

இந்த வழக்கில் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இவ்வழக்கில் விசாரணையை அதிகாரிகள் முடித்துவிட்டதை தொடர்ந்து ஃபெமா நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் மூவரும் 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்