Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

ஸ்ரீ ல.சு.க. இத்தேர்தலில் படுதோல்வி அடையும்- ஜி.எல். ஹேஷ்யம்

Posted On : November 11, 2017

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வியடையும் எனவும் அது நாட்டிலுள்ள கட்சிகளிடையே மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு விடும் எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மக்கள் விடுதலை முன்னணியுடனேயே போட்டி இருப்பதாகவும் அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து தோல்வி ஒத்திப் போட்டு வந்ததன் விளைவை அறியும் காலம் வெகு தொலைவில் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டியிருக்கும் காலமெல்லாம் கட்சி உறுப்பினர்களின் வாக்கு எப்படிப் போனாலும் பொதுவானவர்களின் வாக்குகள் கூட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடைக்காது எனவும் பொரல்ல என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்