Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

மணிப்பூரில் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு

Posted On : November 13, 2017

மணிப்பூர் மாநிலம் சந்தல் மாவட்டத்தில் இன்று காலை அசாம் ரைபிள்ஸ் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகில் நடைபெற்றது.

குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள், மீட்புக் குழுவினரை அனுப்பி வைத்தனர். மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர்களும் அழைக்கப்பட்டுள்ளன.

மணிப்பூரில் தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுவினர், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். கடந்த ஜூன் மற்றும்  ஜூலை மாதங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 2 வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்