Home / விளையாட்டு /

இலங்கை டெஸ்ட் தொடரில் கங்குலி சாதனையை கோலி முறியடிக்க வாய்ப்பு

Posted On : November 14, 2017

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் கங்குலியின் சாதனையை விராட்கோலி முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் தொடரில் கங்குலியின் சாதனையை விராட்கோலி முறியடிக்க வாய்ப்பு உள்ளது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக (ஒயிட்வாஷ்) கைப்பற்றும் போது வீராட் கோலி இந்த சாதனையை முறியடிப்பார்.

இந்திய கேப்டன்களில் தொடர்ந்து அதிக வெற்றி பெற்றவர்களில் 2-வது இடத்தில் இருக்கிறார் கங்குலி. அவரது தலைமையில் இந்திய அணி 21 டெஸ்டில் வெற்றி பெற்று இருக்கிறது. விராட்கோலி 19 வெற்றியுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

இலங்கைக்கு எதிராக 3 டெஸ்டிலும் வெல்லும்போது அவர் 22 வெற்றியுடன் 2-வது இடத்துக்கு முன்னேறுவார். டோனி 27 வெற்றியுடன் முதல் இடத்தில் உள்ளார்.

விராட்கோலி அணி சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்டிலும் வென்று ஒயிட்வாஷ் செய்து இருந்தது. தற்போது சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்த முறையும் முழுமையாக டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் இந்திய அணி உள்ளது.

மேலும் 2015-ம் அண்டு ஆகஸ்டில் இலங்கை பயணத்தின்போது டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இருந்தது.

ஒருவேளை விராட்கோலி 3-வது டெஸ்டில் விளையாட முடியாமல் ஓய்வு எடுத்தால் கங்குலியின் சாதனையை முறியடிப்பதில் தாமதம் ஏற்படலாம். அடுத்த டெஸ்ட் தொடர் வரை காத்திருக்க வேண்டும்.

மேலும் இலங்கை அணி ‘டிரா’ செய்யும் வகையில் விளையாடினாலும் கோலியின் புதிய சாதனை தாமதமாகும்.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்