Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

கொழும்பில் 2,300 குடும்பங்களுக்கு காணி மற்றும் வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்கி வைப்பு

Posted On : November 14, 2017

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் கொழும்பு வாழ் 2,300 குடும்பங்களுக்கு காணி மற்றும் வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (14) அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ‘செமட செவன’ (சகலருக்கும் நிழல்) எனும் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இவ் உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் அமைத்ச்சர்களான தயா கமகே, மேல் மாகாண ஆளுனர், பிரதியமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்