Home / பல்சுவை / சமையல் /

பிரெட்வுடன் சாப்பிட அருமையான அவகாடோ டிப்

Posted On : November 14, 2017

அவகாடோவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பிரெட்வுடன் தொட்டுக்கொள்ள அருமையான சத்தான அவகாடோ டிப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அவகாடோ (பட்டர் ஃப்ரூட்) – ஒன்று,
வெங்காயம் – ஒன்று,
தக்காளி – ஒன்று,
பச்சை மிளகாய் – ஒன்று,
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அவகாடோவை தோல் நீக்கி உள்ளே உள்ள கதை பகுதியை மட்டும் தனியா எடுத்து மசித்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மசித்த அவகாடோ, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும்.

கடைசியாக எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

இது பிரெட் உடன் சாப்பிட உகந்தது.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்