Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

74 கோடி டொலர் கடனை இரண்டு அரச வங்­கிகள் செலுத்­த­வேண்டும்

Posted On : November 14, 2017

கடந்த காலத்தில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறு­வ­னத்­திற்­காக 74 கோடி அமெ­ரிக்க டொலர் கட­னாக பெறப்­பட்­டது. இதற்­கான கடன் தொகையை இரு அரச வங்­கி­களும் திறை­சே­ரிக்கு செலுத்த வேண்டி ஏற்­பட்­டுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

அர­சாங்க கணக்­குகள் பற்­றிய குழு­வினால் மேற்­கொள்­ளப்­பட்ட அரச நிறு­வ­னங்கள்,மாகாண சபைகள்,உள்­ளூ­ராட்சி சபைகள் என்­ப­வற்றின் நிதிக் கட்­டுப்­பாடு,செய­லாற்­றுகை என்­ப­வற்றை மதிப்­பீடு செய்து விருது வழங்கும் நிகழ்வு நேற்று திங்­கட்­கி­ழமை பாரா­ளுன்ற கட்­ட­டத்­தொ­கு­தி­யி­லுள்ள குழு அறையில் நடை­பெற்­றது.இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன் போது தங்க விருது வழங்­கப்­பட்ட அரச நிறு­வ­னங்­க­ளி­டையே கணக்­காய்வு திணைக்­க­ளத்­திற்கு முத­லி­டமும் பிர­தமர் அலு­வ­லத்­திற்கு இரண்­டா­மி­டமும்,தேர்தல் திணைக்­க­ளத்­திற்கு மூன்றாம் இடமும் கிடைத்­தன. அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

முன்­னைய காலங்­களில் அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளுக்கு பெறப்­பட்ட கடன் தொகையை கொண்டு ஒரு திட்டம் மாத்­தி­ர­மின்றி பல அபி­வி­ருத்தி திட்­டங்­களை ஆரம்­பித்­தி­ருக்க முடியும். எனினும் கடன் தொகையை பெற்று நாட்டை சீர­ழித்து விட்­டனர்.

அத்­துடன் கடந்த காலத்தில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறு­வ­னத்­திற்­காக 74 கோடி அமெ­ரிக்க டொலர் கட­னாக பெறப்­பட்­டுள்­ளது. எனினும் ஸ்ரீலங்கன் நிறு­வத்­திற்­காக பெறப்­பட்ட கடன்­தொ­கையை இரண்டு அரச வங்­கி­களின் ஊடா­கவும் திறை­சே­ரியின் ஊடாக செலுத்த வேண்டி ஏற்­பட்­டுள்­ளது.

நாட்டை கடன் சுமையில் இருந்து மீட்டு அபி­வி­ருத்தி பாதைக்கு கொண்டு செல்­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்­தி­னா­லேயே முடியும். நாட்டின் கடன் சுமையை அடுத்த தலை­மு­றைக்கு விட்டு செல்ல கூடாது. இந்த  பாவத்தை நாமே போக்க வேண்டும். அடுத்த தலை­மு­றைக்கு விட்டு சென்றால் நாட்­டுக்கே அது பாதிப்­பாக அமையும்.

அத்துடன் கடந்த ஆறு வருடங்களுக்கான நிதி தொடர்பான நிர்வாக கட்டமைப்பு பெருமளவில் பாதித்துள்ளது. ஆகவே இந்த நெருக்கடியில் இருந்து நாட்டை நாம் மீட்க வேண்டும் என்றார்.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்