Home / உலகம் / தொழில்நுட்பம் /

மிகவிரைவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 5?

Posted On : November 20, 2017

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் அடுத்தடுத்து வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் ரெட்மி 5, ரெட்மி நோட் 5 அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களாக இருக்கின்றன. தற்சமயம் வெளியாகி்யுள்ள தகவல்களின் படி சியோமி ஸ்மார்ட்போன்கள் வரும் மாதங்களில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

ரெட்மி 5 சார்ந்த தகவல்களை மிக ரகசியமாக கா்த்து வந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ரெட்மி 5 ஸ்மார்ட்போனின் தயாரிப்பு பணிகள் அக்டோபர் மாத வாக்கில் துவங்கியுள்ளதாகவும், டிசம்பர் மாத துவக்கம் அல்லது இறுதியில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் எச்டி-டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர், 3 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 12 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ரெட்மி நோட் 4 விலை நிரந்தரமாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனும் மிக விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவில் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.9,999 என்றும் 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ.11,999 மற்றும் ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் மற்றும் MIUI 9 சார்ந்த ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என்றும் 16 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்