Home / விளையாட்டு /

3-வது முறையாக வேகப்பந்து வீரர்களுக்கு 10 விக்கெட்

Posted On : November 20, 2017

இந்திய மண்ணில் இந்திய வேகப்பந்து வீரர்கள் ஒரே இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்துவது இது 3-வது முறையாகும்.

கொல்கத்தா டெஸ்டில் இலங்கை அணியின் 10 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீரர்களே கைப்பற்றினர். முகமது‌ஷமி, புவனேஷ்வர்குமார் தலா 4 விக்கெட்டும், உமேஷ்யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ஜடேஜாவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை.

இந்திய மண்ணில் இந்திய வேகப்பந்து வீரர்கள் ஒரே இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் (10) வீழ்த்துவது இது 3-வது நிகழ்வாகும். 1983-ம் ஆண்டுக்கு பிறகு அதாவது 34 வருடத்துக்கு பிறகு இந்த நிகழ்வு நடந்துள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்