Home / உலகம் / தொழில்நுட்பம் /

2018 டொயோட்டா ரஷ் அறிமுகமானது

Posted On : November 23, 2017

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஐந்து பேர் அமரக்கூடிய பல்வேறு எஸ்.யு.வி. மாடல்கள் கிடைக்கின்றன. எனினும் ஏழு பேர் அமரக்கூடிய மாடல் இந்தியாவில் இல்லை.

ஹூன்டாய் கிரெட்டா மாடலில் சிறப்பான இன்ஜின் மற்றும் பிரீமியம் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ரெனால்ட் கேப்டூர் மாடலில் பிரீமியம் அம்சங்களை கொண்டிருப்பதோடு, அழகிய எஸ்.யு.வி. மாடலாக இருக்கிறது. டொயோட்டா நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை ரஷ் எஸ்.யு.வி. ஏழு பேர் அமரக்கூடிய வாகனம் இந்தோனேஷியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது.

2018 டொயோட்டா ரஷ் பார்க்க யூடிலிட்டி வாகனம் போன்று காட்சியளிக்கிறது. வடிவமைப்புகளை பொருத்த வரை டொயோட்டா ரஷ் மாடலில் இன்னோவா போன்ற முன்பக்க கிரில், நான்கு குரோம் ஸ்லாட், எல்.இ.டி. ஹெட்லைட் மற்றும் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்ற வடிவமைப்பு ஹோன்டா CR-V மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த எஸ்.யு.வி. மாடலின் முன்பக்க பம்ப்பரில் பிரத்யேக செவ்வக வடிவிலான ஹவுசிங்கில் வட்டவடிவிலான ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. 220 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடலான டி.ஆர்.டி. ஸ்போர்டிவோ பேட்ஜ், சைடு-பாடி பிளாஸ்டிக் கிளாடிங் மற்றும் 17.0 இன்ச் அலாய் வீல் மற்றும் டூயல் டோன் கேபின் கொண்டுள்ளது.

புதிய டொயோட்டா ரஷ் எஸ்.யு.வி மாடலில் கீலெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுஎஸ்பி, ரேடியோ, சிடி பிளேயர் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மிராகாஸ்ட் மற்றும் வெப்லின்க் உள்ளிட்ட அம்சங்கல் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை டொயோட்டா ரஷ் மாடலில் ஆறு ஏர்-பேக், ABS, EBD, ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை 2018 டொயோட்டா ரஷ் மாடலில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் 104 bhp, 140 Nm செயல்திறன் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 5 அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்